உழுந்தங்களி உருண்டை

தேவையான பொருட்கள்:

 • உளுந்து-1/2 கப்
 • அரிசி மாவு-1 1/2 கப்
 • கருப்பட்டி-2 
 • நல்லெண்ணெய்-1 கப்

செய்முறை:

         கருப்பட்டியை காய்ச்சி வடிகட்டி வைத்து கொள்ளவும்.ஒரு கடாயில் அரிசி மாவு,உளுந்து போட்டு தண்ணீர் சேர்த்து கரைத்து கொள்ளவும்.பின்பு அதை அடுப்புபில் வைத்து,நன்கு கிளறவும்.சிறிது சிறிதாக கருப்பட்டி பாகை சேர்த்து கொள்ளவும்.அதில் நல்லெண்ணெயும் சேர்த்து நன்கு கிளறி மூடி வைக்கவும்.சிறிது நேரம் கழித்து உருண்டைகளாக பிடித்து கொள்ளவும்.

Advertisements

கோயிலின் வாயிற் படிக்கட்டு


கோயிலின் நுழை வாயிலில் குறுக்காக இருக்கும் படிக்கட்டின் மேல் நின்று செல்லாமல் அதனை தாண்டி செல்ல வேண்டும் என்று பெரியவர்கள் கூறுகிறார்களே ..ஏன் தெரியுமா?

• ஒரு கோயிலுக்குள் நுழையும் முன் முதலில் நமது பாதத்தை கழுவ வேண்டும் ..

• பின் கால், கை ஆகியவைகளை கழுவிய பின் சில துளிகளை எடுத்து தலையை சுற்றி வட்டமிட்டு தெளித்து கொள்ள வேண்டும் …

• இதன் மூலம் நம் உடலை தயார் படுத்திகொண்டு முதலில் கோபுரத்தையும் அதில் உள்ள கலசங்களையும் பார்த்து வணங்க வேண்டும் …

• பின்னர் வாயிற்காப்போர்கள் ஆன துவாரபாலகர்களின் அனுமதியை வாங்கிகொண்டு உள்ளே செல்ல வேண்டும்

• உள்ளே செல்லும் முன் அங்குள்ள வாயிற்படியை கடந்து செல்ல வேண்டும் ..

• அந்த படியை தாண்டும் போது, ” நான் கொண்டு வந்த எதிர்மறை வினைகள், எதிர்மறை எண்ணங்கள், கெட்ட செயல்கள், கவலைகள் எல்லாவற்றையும் இங்கேயே விட்டு உள்ளே செல்கின்றேன்..

• இனி ஆண்டவனின் கருணையுடன் கூடிய ஆசிர்வாதமும், நேர்மறை ( நல்ல ) வினைகளுமே எனக்கு கிடைக்க வேண்டும் ஆண்டவா ” என்று கும்பிட்டவாறே அந்த படியை தாண்ட வேண்டும் …

• அந்த படியின் மேல் நின்று கடந்தால் நாம் அவற்றை கூடவே உள்ளே எடுத்து செல்வதாக அர்த்தம் …

• ஒரு கோயில் என்பது நாள் முழுவதும் கூறப்படும் மந்திரங்களாலும், நாதஸ்வரம், கெட்டி மேள சத்தங்களாலும், பேசப்படும் மங்களகரமான வார்த்தைகளாலும், முழுதும் நேர்மறை எண்ணங்களாலேயே நிரம்பியிருக்கும் …

• எனவேதான் கோயிலுக்கு சென்று அந்த நேர்மறை எண்ணங்களை பெற்று உயர்வுடன் வாழுங்கள் என்று வாழ்த்துகிறோம் .

காலையில் எழுந்ததும் என்ன செய்ய வேண்டும்

காலையில் அவசர அவசரமாக எழுந்து, உண்டும் உண்ணாமலும் நான்கு வாய் அள்ளிப்போட்டுக்கொண்டு, அரக்கப்பறக்க அலுவலகம் சென்று, மதியச் சோறு மறந்து பாடுபட்டு, சோர்வாக வீட்டுக்குத் திரும்பி, படுக்கையில் விழுந்தால்… மீண்டும் காலையில் எழுந்து அதே மாரத்தான் ஓட்டம்! தினம் தினம் இப்படி டென்ஷனாகத்தான் ஓட வேண்டுமோ? இல்லை. ஒரு நாளின் காலைப் பொழுதுதான் அன்றைய தினம் முழுவதும் நாம் சுறுசுறுப்பாக இயங்குவதற்கான ஆரம்பப்புள்ளி. அந்தக் காலைப் பொழுதை முறையாகத் திட்டமிட்டால், அன்றைய முழு நாளும் உற்சாகம் ததும்பும். அது எப்படி எனுப் பார்ப்போமா?

 • அதிகாலையில் எழுவது ஆரோக்கியத்தின் அடிப்படை. அதிகாலை எழும் பழக்கத்தைக் கைக்கொள்ள, முதல் நாள் குறித்த நேரத்துக்கு உறங்கவேண்டியது அவசியம். குழந்தைகள் என்றால், 10 மணி நேரம் ஆழ்ந்த உறக்கமும், பெரியவர்கள் என்றால் 6-8 மணி நேர உறக்கமும் உடலுக்கும் உள்ளத்துக்கும் மிகவும் அவசியம். வளரிளம் பருவத்தினருக்கு தூங்கும் நேரத்தில்தான் ஹார்மோன்கள் சீராகச் சுரக்கும். அதனால், குறிப் பிட்ட நேரத்தில் உறங்கி, குறிப்பிட்ட நேரத்தில் எழும் பழக்கம் மிக மிக அவசியம்.
 • எழுந்ததும் மொபைல், டி.வி., சோஷியல்மீடியா பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும். அது நம் நேரத்தைச் சுரண்டி, கண்களையும் மனதையும் கெடுக்கிறது. காலையிலேயே நம் மனஅழுத்தம் அதிகரித்துவிடுகிறது. இதனால், நாம் புத்துணர்ச்சியை இழந்துவிடுகிறோம்.
 • எழுந்ததும் தண்ணீர் பருகி, காலைக்கடன்களை முடித்துவிட்டு, 45 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்ய வேண்டும். அது நடைப்பயிற்சி, சைக்கிளிங், யோகா என எதுவாகவும் இருக்கலாம்.
 • காலையில் வெளியில் நடக்கச் செல்வது அல்லது விளையாடச் செல்வது, உடலுக்கு மட்டும் அல்ல, மனதுக்கும் நல்லது. காலையில் கிடைக்கும் சுத்தமான ஆக்சிஜன் உடலுக்குப் புத்துணர்வை அளிக்கிறது.
 • அடுத்த ஒரு மணி நேரத்தில் நிதானமாகக் குளித்து, தவறாமல் காலை உணவை உண்ண வேண்டும். ஆவியில் வேகவைக்கப்பட்ட காய்கறிகள், பழங்கள், பயறு வகைகள் என ஏதாவது ஒன்றுடன், இடியாப்பம், இட்லி போன்ற வேகவைத்த உணவுகளைச் சாப்பிடுவது நல்லது.
 • எட்டு மணிக்கு மேல், பரபரப்பான வாழ்க்கையில் சுழலப்போகிறோம். அலுவலகம் செல்வதற்கான பயண நேரத்தைத் திட்டமிட்டு, குறித்த நேரத்துக்குச் சற்று முன்னதாகவே சென்றுவிடுங்கள். இது பணியிடத்தில் டென்ஷன் இன்றி, உங்கள் ஒருநாளைத் திட்டமிட உதவும்.

சந்தோஷமான குடும்பத்திற்க்கான மருந்து :


கணவன் மனைவி இடையே அடிக்கடி சண்டை வர நகரத்திலேயே மிகச்சிறந்த மனோதத்துவ டாக்டரை தேடி ஒரு தம்பதி சென்றனர், டாக்டர் அந்தக்கணவனை பரிசோதித்து விட்டு, மருந்து எழுதுவதற்காக பேப்பரை கையில் எடுத்தார்.

உடனே அந்தப்பெண், ”டாக்டர், எவ்வளவு விலையாய் இருந்தாலும் பரவாயில்லை, நல்ல மருந்தினை எழுதித் தாருங்கள்” என்றாள்.

எழுதும் முன் ஒரு சில நிமிடங்கள் யோசித்த டாக்டர், பிறகு எதையோ எழுதி அந்தப்பெண்னின் கையில் மருந்துச்சீட்டினை தினித்தார்.

மருந்துச்சீட்டினை கையில் வாங்கிய அந்தப்பெண் அதை விரித்துப்பார்த்தாள். அதில் “ அன்பையும், நேசத்தையும் உங்கள் கணவருக்கு தாருங்கள் ” என்று எழுதியிருந்தது.

“ அவ்வாறு கொடுத்தும் சரியாகவில்லை எனில் என்ன செய்வது டாக்டர்” என்று சந்தேகத்துடன் கேட்டாள் அந்த மனைவி .

“ சரியாகவில்லை எனில், டோஸை ( DOSE ) அதிகப்படுத்துங்கள்” என்று மிக அமைதியாய் கூறினார் டாக்டர் .

சந்தோஷம்

நாம் வாழும் வீடு எவ்வளவு வசதியாக இருக்கிறது என்பதை விட,

எவ்வளவு சந்தோசமாக இருக்கிறது என்பது முக்கியம்.

வீட்டு குறிப்புகள்

 • ஊதுவத்திகளை ஏற்றுவதற்கு முன் நீரில் நனைத்து பின்பு காற்றில் உலரவிட்டு ஏற்றினால், அதிக மணமாகவும் இருக்கும் நன்றாகவும் எரியும்.
 •  பட்டுச் சேலைகளைத் துவைக்கும்போது அலசும் நீருடன் சிறிது எலுமிச்சை சாறு கலந்து கொண்டால் சாயம் போகாது; மங்காது. பட்டுச் சேலையும் பளிச்சிடும்.
 •  வெள்ளிப்பாத்திரங்களில் கருமை படராமல் தடுக்க, அவற்றை அடுக்கி வைக்கும்போது இடையிடையே கற்பூர வில்லைகளையும் போட்டு வைக்க வேண்டும்.
 • மருதாணியால் ஆடையில் ஏற்படும் கறைபோக, அதை வெதுவெதுப்பான பாலில் அரை மணி நேரம் ஊற வைத்து, பின் சோப் போட்டு அலசினால் கறை போய்விடும்.
 • மேஜை ட்ராயரின் இரு ஓரங்களிலும் சிறிது மெழுகு அல்லது சோப்பைத் தட வினால் எப்போதும் சிரமமில்லாமல் திறந்து மூடலாம்.
 • பூசணிக்காய் சாற்றில் தங்க நகைகளை ஊற வைத்து கழுவினால் அவை நன்றாகப் பளிச்சிடும்.