Jokes 50

1. மனைவி: கொஞ்ச நாளைக்கு என்கூடச் சந்தோஷமா இருக்கிற மாதிரி நடிங்க
கணவன்: ஏன் .. .. ?
மனைவி: அதைப் பார்த்துட்டுத் தான் கண்ணை மூடுவேன்னு உங்கம்மா அடம் பிடிக்கிறாங்களே.

2. டாக்டர் கோபமா இருக்காரே, ஏன் ?
ஆபரேஷன் தியேட்டர்ல யாரோ உடல் மண்ணுக்கு, உயிர் டாக்டருக்கு-னு எழுதி வெச்சிருக்காங்களாம்.

3. என்னம்மா உங்க கணவர் காணாம போய் இருபது நாள் ஆச்சுன்னு சொல்றீங்க….. ஏன் இவ்வளவு நாள் கழிச்சு வந்து கம்ப்ளைண்ட் பண்றீங்க ?
இன்னிக்குத் தான் சார் அவரோட சம்பள நாள்.

4. தரகரே.. நீங்க பெரிய விஷயத்தை மறைச்சுட்டீங்க.. இப்படி
செய்யலாமா..?
ஏங்க.. என்ன ஆச்சு இப்போ..?
பொண்ணு அஞ்சரை அடி உயரம்ன்னு சொன்னீங்க.. சரி.. மூணு அடி அகலம்ன்னு சொன்னீங்களா..?

5. நிருபர்: நீங்க இருபது வருசமா கட்சியிலே இருக்கீங்க. எம்.பி.க்கு ஏன் நிக்கல்லே…
நடிகை: இருபத்தி ஐந்து வயது ஆனவங்கதான் தேர்தல்லே நிற்கணுமாமே?

6. கணவன் ; சாமி கிட்ட என்ன… மா வேண்டிகிட்ட?
மனைவி ; அடுத்த ஜென்மத்திலும் நீங்க தான் என் புருஷனா வரணும் னு வேண்டிகிட்டேன் ங்க…
நீங்க என்னங்க வேண்டிகிட்டீங்க?
கணவன் ; எனக்கு அடுத்த ஜென்மமே வேணாம் னு வேண்டிகிட்டேன்…

7. உங்க மாமியாருக்கு ஆபரேஷன் பண்ணனும், ரெண்டு லட்சம் ரூபாய் ஆகும்…!
என்ன டாக்டர், கூலிப் படையை விட அதிகமா சொல்றீங்க…!

8. டைரக்டர்: நம்மளோட அடுத்த படம் 100நாள் ஓடணும்….
பவர் ஸ்டார் : இல்லை 500நாள் ஓடணும்…
டைரக்டர்: ஜோக் அடிக்காதிங்க சார் !!
பவர் : ங்கொய்யால! முதல்ல ஜோக் அடிச்சது யாரு நீயா? நானா?..

9. பஸ் சார்ஜ் எவ்வளவு ஏறினாலும் எனக்கு கவலை இல்லை…
நிஜமாவா?
ஆமாம், செக்கிங் ஏறினால்தான் கவலை..!!!???..

10. என்ன இவ்வளவு சோகமா இருக்கீங்க…
என்னோட வைஃப் ஒரு மாசம் என்கூட பேசமாட்டேன் என்று சொல்லிட்டா.
அதுக்கு நீங்க சந்தோஷம் தானே படணும்…
எப்படிங்க…இன்னையோட அந்த ஒரு மாசம் முடியுதே…

11. எட்டு மணிக்கு மேலே விசிட்டர் யாரும் ஹாஸ்பிட்டல்ல இருக்கக்கூடாது..!
இருந்தா?
அவங்களையும் ‘அட்மிட்’ பண்ணிடுவோம்…!!

12. டாக்டர் ; ஏன் சார்.. எதுக்கு நர்ஸ் கையை தடவிப் பார்த்தீங்களாம்..?
நோயாளி ; நீங்கதானே சொன்னீங்க.. ஊசி போட்ட கையை தடவிக் கொடுங்கன்னு..!

13. ஆபரேஷன் முடிஞ்சு தையல் போடுற நேரத்துலதான் அவரு போலி
டாக்டர்னு தெரிஞ்சுது…!
எப்படி?
தையலை, சாதாரண நூல்ல போடவா. இல்லை மாஞ்சா நூல்ல போடவான்னு கேட்டாரே..?

14. கிளினிக்கில் எதுக்கு 12 ராசிகளின் பெயர்களை டாக்டர் எழிலன் சார் எழுதி வெச்சிருக்கிறாரு?
ராசியில்லாத டாக்டர்னு யாரும் சொல்லிடக் கூடாது
பாருங்க, அதான்!

15. நான் என்ன சொன்னாலும், என் மருமகள் ’உங்க வாய்க்கு சர்க்கரைதான் போடணும் அத்தை’னு சொல்றா !இதிலே என்ன இருக்கு ?
எனக்கு சர்க்கரை வியாதி இருக்கு !

16. நேத்து நான் என் மனைவியை முட்டி போட வெச்சிட்டேன்!
நிஜமாவா, எப்படி?
அவ என்னை அடிக்க வரும்போது நான் கட்டிலுக்கு அடியிலே போய் ஒளிஞ்சிகிட்டேன்!’…

17. பல்லு எப்படி விழுந்திச்சு ?
அத வேற யாருகிட்டயாவது சொன்னா மீதி பல்லும் கொட்டிரும்னு என் மனைவி சொல்லியிருக்கா டாக்டர்!

18. சொந்த ஊர் எது? ….
அந்த அளவுக்கு வசதி இல்லீங்க….
சொந்த வீடுதான் இருக்கு!

19. காதலி: நம் காதலை ஏன் அப்பாகிட்ட சொல்ல அவசரப்படுத்துறீங்க…?
காதலன்: அப்பதான் உனக்கு வேற இடத்தில் சீக்கிரம் மாப்பிள்ளை பார்ப்பார்.

20. கருமம், கண்றாவியா எப்படித்தான் இத குடிக்கிறீங்களோ? இப்பவாவது புரிஞ்சுக்கிட்டியே, ஏதோ நாங்கள்லாம் ஜாலியா குடிச்சுட்டுருக்கோம்னு நினைத்தாயா?!

21. உங்களை கணவராக அடைய நான் கொடுத்து வைத்தவள்…உங்கப்பாகிட்ட வரதட்சணை வாங்கியதை குத்திக் காட்டிப் பேசாதேன்னு எத்தனை தடவை சொல்லியிருக்கிறேன்.

22. டார்லிங், ராத்திரி என்ன டிபன்? (கோபத்துடன் மனைவி) ஒரு டம்ளர் விஷம்!… ஓகே டியர். நான் வர கொஞ்சம் லேட்டாகும். நீ சாப்பிட்டு படுத்துக்கோ.

23. என்னங்க நம்ம கல்யாண நாளைக் கூட மறந்துட்டீங்களே…!! உனக்குத்தான் தெரியுமே… நான் நல்ல விஷயத்தை மறக்க மாட்டேன்னு…

24. ஏன் தினமும் கோவில்ல உங்க மனைவிக்கு அர்ச்சனை பண்றீங்க?…. வீட்டல எனக்கு மனைவி தினமும் அர்ச்சனை பண்றா, அதான் திருப்பி நான் பண்ணுறேன்!

25. கோபு-எங்கம்மாவுக்கு சர்க்கரை வியாதி இருப்பது என் மனைவிக்கு இன்னும் தெரியாது..
நண்பன் -தெரிஞ்சா கவலைப் படுவாங்களா..?
கோபு-இல்லே.தினம் ஒரு ஸ்வீட் செஞ்சு வெறுப்பேத்துவா

26. மாப்பிள்ளை வீட்டார்: பொண்ணு புடிச்சிருந்தா தான் சாப்பிடுவோம்.
பெண் வீட்டார்: பொண்ணு புடிச்சிருக்குன்னு சொன்னாதான் சமையலே ஆரம்பிப்போம்..!

27. நோயாளி-“ஆபரேஷன் முடிந்து நீங்க நடந்தே வீட்டுக்குப் போகலாம்.”
டாக்டர்-“ஆட்டோவுக்குக் கூடக் காசு இருக்காதா டாக்டர்?”

28. ராமு : முதலாளி.. எனக்கு கல்யாணமாயிருச்சு.. கொஞ்சம் சம்பளத்தை சேர்த்துக் கொடுங்க..
முதலாளி : கம்பெனி வளாகத்துக்கு வெளியே நடக்கற விபத்துகளுக்கு நான் நஷ்ட ஈடு தர இயலாது..!

29. நண்பனுக்கும், நல்ல நண்பனுக்கும் என்ன வேறுபாடு..?
நீங்க உடம்பு சரியில்லாம, மருத்துவமனையில் இருந்தா, நண்பன் சொல்லுவான்,, ” சீக்கிரம் குணமடைஞ்சு வீட்டுக்கு வரணும்டா..!
நல்ல நண்பன் சொல்லுவான்.. ” நர்ஸ் டக்கரா இருக்கா மாப்ளே.. கொஞ்சம் ஆற அமர டிஸ்சார்ஜ் ஆவு..!

30. வித்வான் : நேத்து என் கச்சேரிக்கு வருவீங்கன்னு எதிர்பார்த்தேன்.
நம்மவர் : வரனுணும்னுதான் சார் நினைச்சேன்.அதுக்குள்ள வேறொரு கஷ்டம் வந்திருச்சி!.

31. நோயாளி : ஹலோ டாக்டர்… உங்களை வந்து பார்க்கணும்… நீங்க எப்ப ஃப்ரீ?
டாக்டர் : எப்ப வந்தாலும் ஃப்ரீ கிடயாது… பீஸ் வாங்குவேன்…

32. கணவன் : ச்சீய்! காப்பியாடி இது? நாய்கூட இதை குடிக்காதுடி.
மனைவி : ஆமாங்க! அதனாலதான் நம்ம நாய்க்கு ஹார்லிக்ஸ் போட்டு வச்சுருக்கேன்.
கணவன் : ????!!!!

33. நர்ஸ் : ஐந்து நிமிஷம் கழிச்சு வந்திருந்தா இவரைக் காப்பாத்தியிருக்கலாம் !
நபர் : ஏன்?
நர்ஸ் : டாக்டர் ஊருக்குக் கிளம்பிப் போயிருப்பார் !

34. நெப்போலியன் :- என்னுடைய அகராதியில் முடியாது என்கின்ற வார்த்தையே கிடையாது
சர்தார்ஜி :- இப்போ சொல்லி என்ன பிரயோசனம், வாங்கும்போதே பார்த்து வாங்கியிருக்கணும்

35. நோயாளி : என்ன டாக்டர் இது, மருந்து சீட்டில் சா-வுக்கு முன், சா-வுக்கு பின் அப்படினு போட்டிருக்கீங்க.
டாக்டர் : அதுக்கு ஏன் இப்படிப் பதர்றீங்க! சாப்பாட்டுக்கு முன், சாப்பாட்டுக்குப் பின் அப்படின்னு எழுதியிருக்கேன்.

36. ஆசையே துன்பத்துக்குக்காரணம்னு இப்பதான் நான் தெரிஞ்சுக்கிட்டேன்
எப்படி?
என் மனைவியை நான் ஆசைப்பட்டுத்தான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.

37. பையன்-அம்மா எதிர் வீட்டு ஆண்டி பேரு என்னம்மா?
அம்மா-விமலாடா..
பையன்-அப்பாவிக்கு இது கூட தெரிய மாட்டேதுங்கும்மா அந்த ஆண்டிய “டார்லிங்”னு கூப்பிடுறார்.

38. டாக்டர்-“சாரிங்க, நான் எவ்வளவோ போராடிப் பார்த்தேன், பேஷண்ட்டை காப்பாத்த முடியலை.”
நர்ஸ்-“டாக்டர் உளராதீங்க, நீங்க செஞ்சிட்டு வர்றது போஸ்ட்மார்ட்டம்!”

39. வாத்தியார்-டேய் முட்டாளுக்கும் அடி முட்டாளுக்கும் என்ன வித்தியாசம்?
மாணவன்-நாங்க எல்லாரும் முட்டாளுங்க சார் நீங்க எங்களை அடிக்கிறதால அடி முட்டாள் சார்

40. வித்வான் : நேத்து என் கச்சேரிக்கு வருவீங்கன்னு எதிர்பார்த்தேன்.
நம்மவர் : வரனுணும்னுதான் சார் நினைச்சேன்.அதுக்குள்ள வேறொரு கஷ்டம் வந்திருச்சி!.

41. தலைவர்-என்னப்பா மேடையில ஓடா வந்து விழுது?
தொண்டர்-ஓட்டை அள்ளி வீசுங்க என்பதை தப்பா புரிஞ்சுகிட்டாங்க..

42. “எங்க வீட்டு நாயைக் காணோம் சார்…” “அடையாளம் சொல்லுங்க…” “அது கோபமா குரைக்கும் பொழுது, என்னோட மாமியார் மாதிரியே இருக்கும்…….!”

43. “என்னை, பெண் பார்க்க வந்தன்னிக்கு, நீங்க டிபனை தொடவே இல்லையே ஏன்?” “ரெண்டாவது ‘ஷாக்’ எதுக்குன்னு, தான்..!”

44. நேத்து உன் மனைவிக்கும், உன் அம்மாவுக்கும் நடந்த சண்டைல, யாருக்கு பின்னாடி நீ நின்ன?” “போடா நான் பத்திரமா பீரோ பின்னாடி போய் நின்னுக்கிட்டேன்.

45. என்னதான் ஒருவன் குண்டா இருந்தாலும் அவனை துப்பாக்கிக்குள்ள போட முடியாது.

46. நண்பன்-நேற்று பெண் பார்க்கப் போன இடத்தில மயங்கி விழுந்திட்டேன்டா…
பெண் அவ்வளவு அழகா?
நண்பன்1-இல்லடா… விஷயம் தெரிந்து என் மனைவியும் அங்கே வந்திட்டா..

47. பக்கத்துவீட்டுகாரர்-வீட்ல எப்பவும் சிரிப்பு சத்தம் கேக்குதே?
ராமு-மனைவி என் மேல பாத்திரத்த தூக்கி போடுவா.
மேல படலேன்னா நான் சிரிப்பேன், பட்டதுன்னா அவள் சிரிப்பா.

48. மனைவி : என்னங்க செத்துட்டா சொர்கத்துல கணவன் மனைவி தனியாத்தான் இருகனுமாம்ல…………..
கணவன் : அதனால தாண்டி அது சொர்க்கம் ………..!
மனைவி . ????

49. பூச்சி night walking போச்சு .
ஒரு பூச்சிக்கு ரொம்ப குளிரிச்சு ,
இன்னொரு
பூச்சிக்கு குளிர்ல ,Why?
அது “கம்பளி பூச்சி ”
எப்புடி !!! ??????? நாங்கெல்லாம் பூச்சிக்கே காட்சிக் காட்டுவோம்ல.

50. ஒருவன்: டேய்! ஏன்டா ஃபேனை ஆப் பண்ணிட்ட?
மற்றொருவன்: எங்கப்பாதான் சொல்லி இருக்காரு,
வியர்வை சிந்தி சாப்பிடனும்ன்னு!

Advertisements

எது? உலக அதிசயம்.

எது?
உலக அதிசயம்.

ஒரு பெரிய குழு, தாஜ் மஹாலை பார்க்க சென்று இருந்தார்கள்,
பார்த்து திரும்பி பஸ்ஸில் வரும் பொழுது தாஜ் மஹாலை விட அழகான ஒரு கட்டிடம் உலகில் வேறு எதுவுமே இல்லை என்பதை போல் பஸ்ஸில் பயணம் செய்தவர்கள் பேசி கொண்டார்கள். தாஜ் மஹால் மிக அழகான கட்டிடம் தான். அதை யாரும் மறுக்க முடியாது. ஆனால்? தாஜ் மஹால் மட்டும் தான் உலகில் அழகான கட்டிடமா. அதை விட அழகான ஒரு கட்டிடம் உலகில் வேறு எதுவும் இல்லையா?
ஏன் இல்லை. நிறையவே இருக்கிறது. சரி உலக அதிசயம் என்றால் என்ன? ஒன்று உருவான பின் அதே போல் ஒன்றை உருவாக்க முடியாது என்பது தான் உலக அதிசயம்.
நெல்லையப்பர் கோவிலில் கல் தூனை தட்டினால் ச, ரி, க, ம, ப, த, நி என்கிற ஏழு இசை ஸ்வரங்கள் ஒலிக்கும். கல்லுக்குள் 7 ஸ்வரங்களை வைத்தார்களே. அது உலக அதிசயம். திருப்பூரில் உள்ள குண்டடம் வடுக நாத பைரவர் கோவிலில். குழந்தை தாயின் வயிற்றில் இருக்கும் பொழுது. குழந்தை இந்த, இந்த மாதத்தில் இந்த, இந்த வடிவத்தில். இவ்ளவு விதமான  இருக்கும் என்பதை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கல்லில் சிற்ப்பங்களாக வடித்து வைத்துள்ளார்கள் என் முன்னோர்கள். அது உலக அதிசயம். அன்னியர் படை எடுப்பின் பொழுது கூட. இந்த அதிசய சிற்ப்பங்களை அவர்களால் சிதைக்க முடியவில்லை. இன்றும் நிறைய கோவில்களில் சூரிய ஒளி குறிப்பிட்ட ஒரு தேதி, நேரத்தில் மாலை போல் வந்து சிவலிங்கத்தின் மீது விழும். அப்ப எவ்ளவு துல்லியமாக செய்து ஆலயங்களை கட்டி இருப்பார்கள் என்று பாருங்கள். சில கோவில்களில் தினமுமே சூரிய ஒளி சிவலிங்கத்தின் மீது மாலை போல் வந்து விழும். வட சென்னையில் உள்ள வியாசர் பாடி ரவீஸ்வரர் சிவன் கோவிலில் 3 வேளையும் சூரிய ஒளி சிவலிங்கத்தின் மீது மாலை போல் வந்து விழும். இந்த கோவிலில் உள்ள சிவலிங்கம் எவ்ளவு ஆண்டுகள் பழமையான லிங்கம் தெரியுமா? ஐயாயிரம் ஆண்டுகள். இது உலக அதிசயம். மதுரை மீனாக்ஷி அம்மன் கோவில், தஞ்சை பெரிய கோவில் சிற்ப்ப, கட்டிட வேலைபாடுகளில் உள்ள அதிசயங்களை பற்றி சொல்வதென்றால். அதற்கு எனக்கு இந்த ஒரு பிறவி பத்தாது.
ஓசோன் 20 ம் நூற்றாண்டில் கண்டு பிடிக்கப்பட்ட படலம். 700 ஆண்டுகளுக்கு முன்பே மதுரை மீனாக்ஷி அம்மன் கோவிலில் ஓசோன் படலத்தின் படம், அதன் முக்கியத்துவம், அதை நாம் எவ்வாறு பாதுக்காக்க வேண்டும் அனைத்தும் அங்கே வைக்கப்பட்டு உள்ளது. அது உலக அதிசயம். யாழி என்கிற மிருகத்தின் சிலை. பல பழங்கால கோவில்களில் இருக்கும். டைனோசர் போல். அதுவும் உலகில் வாழ்ந்து அழிந்த மிருகம் என்று சொல்கிறார்கள். சில பழம்கால கோவில்களில் உள்ள யாழி சிலையின் வாயில் ஒரு உருண்டை இருக்கும். அந்த உருண்டையை நாம் உருட்டலாம். ஆனால் ஆயிரம் குன்பூ வீரர்கள் ஒன்று சேர்ந்து முயற்சித்தாலும். யாழி வாயில் உள்ள உருண்டையை வெளியே உருவ முடியாது. அது உலக அதிசயம்.
இன்று தாஜ் மஹாலை விட மிகப்பெரிய மார்பிள் கட்டிடங்கள் உலகில் உருவாகி விட்டது. இன்று ஒரு வல்லரசு நாடு நினைத்தால். ஆயிரம் தாஜ் மஹாலை உருவாக்க முடியும். ஆனால் கல்லுக்குள் 7 ஸ்வரங்களை வைக்கும் அந்த வித்தையை. எந்த வல்லரசாலும் செய்ய முடியாது. வாயில் உள்ள உருண்டையை உருட்டலாம். ஆனால் உருவ முடியாது. இந்த வித்தையை இன்று எந்த வல்லரசாலும் செய்ய முடியாது. மிகப்பெரிய பிரும்மாண்ட கற் கோவில்களை. அழகிய கலை வேலைபாடுகளோடு உருவாக்குவது. இதை எந்த உலக வல்லரசாலும் செய்ய முடியாதது. உலகில் கிரேக்க, எகிப்து போன்ற பழம்கால நாகரீகங்களுக்கு முன்பே. ஸ்கேன் கருவி இல்லாமல் வயிற்றில் உள்ள குழந்தையை படம் பிடித்ததில் இருந்து. தொலைநோக்கி இல்லாது உலகம் உருண்டை என்பது முதல் ஓசோன் படலம் வரை. முதன் முதலில் உலகிற்கு சொன்னது நமது பாரத தேச முன்னோர்கள். நமது முன்னோர்களின் அறிவு உலக அதிசயம் அல்லவா. இதை போல் இன்னொன்றை இனி உருவாக்க முடியாது என்று இருப்பவையே உலக அதிசயங்கள்.
ஆக தாஜ் மஹால் மிக அழகான கட்டிடம் அதில் சந்தேகம் இல்லை. ஆனால்? அது ஒன்றும் அதிசயம் கிடையாது. ஷாஜகானுக்கு 600 ஆண்டுகளுக்கு முன்பே. ராணி உதையமதி தனது கணவர் பீம் தேவுக்காக தாஜ் மஹாலை விட அழகான, பிரம்மாண்டமான ஒரு நினைவு சின்னத்தை உருவாக்கியது உங்களில் எவ்ளவு? பேருக்கு தெரியும். அந்த நினைவு சின்னத்தின் பெயர் என்ன? தெரியுமா. ராணி கி வாவ். ஹிந்தியில் வாவ் என்றால் கிணறு என்று பொருள். கிணற்று வடிவத்தில் உள்ள கட்டிடங்கள் உலகில் மிக, மிக அபூர்வம். இந்தியாவில் கிணற்று வடிவில் உள்ள மிக பிரும்மாண்டமான அரண்மனை ராணி கி வாவ். இது எந்த அளவு பிரும்மாண்டமான கட்டிடம் என்பதற்கு ஒரு சிறிய உதாரணம். இந்த கட்டிடத்தின் உள். 30 கிலோ மீட்டர் நீள சுரங்க பாதை. ஆங்கிலத்தில் Tunnel என்று சொல்வார்கள். இந்த ராணி கி வாவ் இன்றைய குஜராத் மாநிலத்தில் சித்பூர் என்கிற ஊருக்கு அருகில் உள்ள பதான் pathan என்கிற ஊரில் உள்ளது.
நம் நாட்டில் எத்தனையோ அதிசயங்கள் இன்னும் உண்டு.
நட்புடன்
படித்ததில் பிடித்தது.

பேய்’க்கே தண்ணி காட்டுபவர்களும் இந்த உலகத்தில் இருக்கிறார்கள்..!

நள்ளிரவு நேரம். கடலில் ஒரு படகு
போய்க் கொண்டிருந்தது அதில்
ஒரு இந்தியர் ஒரு அமெரிக்கன் ஒரு சைனாக்காரன் பயணம் செய்து
கொண்டிருந்தார்கள். 

திடீரென்று
ஒரு பேய் படகில் வந்து குதித்தது.

மூன்று பெரும் நடுங்கி
போனார்கள். பேய் தன் கோரமான பல்
வரிசையை காட்டி சிரித்தது.

உங்கள் மூன்று பேர்களையும்
சாப்பிட போகிறேன்” என்றது.

மூன்று பேரும் தங்களுடைய
உயிர்களை காப்பாற்றிக் கொள்ள
பேயிடம் கெஞ்சினார்கள். ஆனால்

பேய் ஒரு நிபந்தனை விதித்தது.

உங்களில் ஒருவனாவது
புத்திசாலியாக இருந்தால் உயிர்
பிச்சை கொடுப்பேன். அதை
நிரூபிக்க இப்போது ஒரு
சோதனை. நீங்கள் மூன்று பேரும்
ஒவ்வொருவராய் கடலில்
எதையாவது தூக்கி
போடவேண்டும். அதை நான்
எடுத்து வந்து விட்டால் நீங்கள்
தோற்று போனதாய் அர்த்தம்.”

மூன்று பேரும் ஒப்புக்கொண்டனர்:

முதலாவதாக  அமெரிக்கன்  தன் கையில்
போட்டிருந்த மோதிரத்தை எடுத்து
கடலில் வீசினான். பேய் உடனே
கடலில் குதித்து அதைத் தேடி
எடுத்து வந்தது.

இரண்டாவதாக சைனாக்காரன் தன் கழுத்தில்
இருந்த செயினை கழற்றி கடலில்
வீசினான். பேய் அதையும் தேடி
பிடித்து கொண்டு வந்து
கொடுத்தது.
பேய் சிரித்தது.

இரண்டு பேர் தோற்று விட்டார்கள்.

இனி மீதி இருப்பது நீ மட்டும் தான்.

நீ எதை வீசப் போகிறாய்..?”

உடனே இந்தியன் தன்னிடம்
இருந்த

குடி தண்ணீர் பாட்டிலை
எடுத்து, அந்த கடலில் கொட்டி
விட்டு

இந்த தண்ணீரை கொண்டு வா !”
என்றான்.

பேய் திகைத்தது. ஓட்டம் பிடித்தது.

நீதி: இந்த கதையின் நீதி
என்னவென்றால்
பேய்’க்கே தண்ணி
காட்டுபவர்களும் இந்த உலகத்தில்
இருக்கிறார்கள்..! என்பது தான்.!

“உங்கள் குழந்தைகள் ஐபேடை மிகவும் விரும்புகிறார்களா?”

உலகத்தின் மாபெரும் ஸ்மார்ட் போன் நிறுவனமான ஆப்பிள் நிறுவனத்தின் மறைந்த முன்னாள் அதிபர் ஸ்டீவ் ஜாப்ஸிடம் ஒரு பத்திரிக்கையாளர் ஒரு முறை கேட்டார், “உங்கள் குழந்தைகள் ஐபேடை மிகவும் விரும்புகிறார்களா?”
அதற்கு ஜாப்ஸ் கூறினார், “அவர்கள் இது வரை அதை உபயோகித்ததில்லை. அவர்கள் எவ்வளவு தகவல் தொழில்நுட்ப சாதனங்களை உபயோகிக்கிறார்கள் என்பதை நாங்கள் கட்டுப்படுத்துகிறோம்.”
அமெரிக்காவின் சிலிகான் வேலியில், பல என்ஜினீர்களும் சாஃப்ட்வெர் நிபுணர்களும், தங்கள் குழந்தைகளை ஐ பேட், ஐ போன், ஆண்ட்ராய்டு போன், டேப்லெட், லேப்டாப் போன்ற நவீன தகவல் தொழில்நுட்ப சாதனங்களை பயன்படுத்த விடுவதில்லை. தங்கள் குழந்தைகளை கம்ப்யூட்டர்கள் இல்லாத பழைய கை முறைக் கல்வியை போதிக்கும் பள்ளிக்கூடங்களில் சேர்க்கிறார்கள்.
அவர்கள் கூறுவது யாதெனில், “நாங்கள் தகவல் தொழில் நுட்பத்தின் பாதிப்பினை மிக அருகில் இருந்து கவனித்திருக்கிறோம். அது எங்கள் குழந்தைகளை பாதிக்க விடமாட்டோம்.”
குழந்தைகள் மிகச்சிறிய வயதில் தொழில்நுட்பத்தை பயன்படுத்தத் தொடங்கும் இந்தப் பிரச்னை தொடருமானால், எதிர்காலத்தில் குழந்தைகள் கற்பனைத்திறன், சுய சிந்தனை இல்லாத மனம் ஊனமுற்ற அரைகுறை வாழ்க்கையோடு வாழும் நிலை ஏற்படும்.
வெளியில் விளையாடித் திரிந்த கடைசி தலைமுறை நமதாகும். ஏனெனில் நம்மிடம் அப்போது லேப்டாப்கள் ஸ்மார்ட் போன்கள் இல்லை. கை வினை மூலம் அனைத்தையும் கற்றுக் கொண்டோம். தகவல்களை புத்தகங்கள் மூலமும் மற்றவரிடம் உரையாடுவது மூலமும் அறிந்து கொண்டோம். கூகிளில் அல்ல. பக்கத்துக்கு வீட்டுக்காரரை தெரிந்து கொள்ளாமல் பேஸ் புக்கில் எங்கோ உள்ள நபரிடம் பேசும் இந்த தலைமுறை அல்ல நமது. பல விதங்களில் விஷயங்களைக் கற்றுக்கொண்டது நம்மை முழு மனிதர்களாக மாற்றியது. குழந்தைகள் கைகளில் ஸ்மார்ட் போன்களை கொடுப்பது ஒரு ஆரோக்கியமான சுய சிந்தனை உள்ள எதிர்கால சூழலை அவர்களிடமிருந்து பறித்து விடும்.
எனவே அடுத்த முறை குழந்தைகளை எப்படி வளர்ப்பது என்று யோசிக்கும்போது, அதி நவீன சாதனங்களை அவர்களிடம் கொடுக்கலாமா வேண்டாமா என்று பரிசீலனை செய்யுங்கள். அவர்களை வெளியில் விளையாடவும் இயற்கையோடு ஒன்றி வாழவும் வாய்ப்பு கொடுங்கள். உங்களை அவர்கள் இப்போது வெறுப்பார்கள். ஆனால் கட்டாயம் எதிர்காலத்தில் உங்களுக்கு நன்றி தெரிவிப்பார்கள்.

"உங்கள் குழந்தைகள் ஐபேடை மிகவும் விரும்புகிறார்களா?"

உலகத்தின் மாபெரும் ஸ்மார்ட் போன் நிறுவனமான ஆப்பிள் நிறுவனத்தின் மறைந்த முன்னாள் அதிபர் ஸ்டீவ் ஜாப்ஸிடம் ஒரு பத்திரிக்கையாளர் ஒரு முறை கேட்டார், “உங்கள் குழந்தைகள் ஐபேடை மிகவும் விரும்புகிறார்களா?”
அதற்கு ஜாப்ஸ் கூறினார், “அவர்கள் இது வரை அதை உபயோகித்ததில்லை. அவர்கள் எவ்வளவு தகவல் தொழில்நுட்ப சாதனங்களை உபயோகிக்கிறார்கள் என்பதை நாங்கள் கட்டுப்படுத்துகிறோம்.”
அமெரிக்காவின் சிலிகான் வேலியில், பல என்ஜினீர்களும் சாஃப்ட்வெர் நிபுணர்களும், தங்கள் குழந்தைகளை ஐ பேட், ஐ போன், ஆண்ட்ராய்டு போன், டேப்லெட், லேப்டாப் போன்ற நவீன தகவல் தொழில்நுட்ப சாதனங்களை பயன்படுத்த விடுவதில்லை. தங்கள் குழந்தைகளை கம்ப்யூட்டர்கள் இல்லாத பழைய கை முறைக் கல்வியை போதிக்கும் பள்ளிக்கூடங்களில் சேர்க்கிறார்கள்.
அவர்கள் கூறுவது யாதெனில், “நாங்கள் தகவல் தொழில் நுட்பத்தின் பாதிப்பினை மிக அருகில் இருந்து கவனித்திருக்கிறோம். அது எங்கள் குழந்தைகளை பாதிக்க விடமாட்டோம்.”
குழந்தைகள் மிகச்சிறிய வயதில் தொழில்நுட்பத்தை பயன்படுத்தத் தொடங்கும் இந்தப் பிரச்னை தொடருமானால், எதிர்காலத்தில் குழந்தைகள் கற்பனைத்திறன், சுய சிந்தனை இல்லாத மனம் ஊனமுற்ற அரைகுறை வாழ்க்கையோடு வாழும் நிலை ஏற்படும்.
வெளியில் விளையாடித் திரிந்த கடைசி தலைமுறை நமதாகும். ஏனெனில் நம்மிடம் அப்போது லேப்டாப்கள் ஸ்மார்ட் போன்கள் இல்லை. கை வினை மூலம் அனைத்தையும் கற்றுக் கொண்டோம். தகவல்களை புத்தகங்கள் மூலமும் மற்றவரிடம் உரையாடுவது மூலமும் அறிந்து கொண்டோம். கூகிளில் அல்ல. பக்கத்துக்கு வீட்டுக்காரரை தெரிந்து கொள்ளாமல் பேஸ் புக்கில் எங்கோ உள்ள நபரிடம் பேசும் இந்த தலைமுறை அல்ல நமது. பல விதங்களில் விஷயங்களைக் கற்றுக்கொண்டது நம்மை முழு மனிதர்களாக மாற்றியது. குழந்தைகள் கைகளில் ஸ்மார்ட் போன்களை கொடுப்பது ஒரு ஆரோக்கியமான சுய சிந்தனை உள்ள எதிர்கால சூழலை அவர்களிடமிருந்து பறித்து விடும்.
எனவே அடுத்த முறை குழந்தைகளை எப்படி வளர்ப்பது என்று யோசிக்கும்போது, அதி நவீன சாதனங்களை அவர்களிடம் கொடுக்கலாமா வேண்டாமா என்று பரிசீலனை செய்யுங்கள். அவர்களை வெளியில் விளையாடவும் இயற்கையோடு ஒன்றி வாழவும் வாய்ப்பு கொடுங்கள். உங்களை அவர்கள் இப்போது வெறுப்பார்கள். ஆனால் கட்டாயம் எதிர்காலத்தில் உங்களுக்கு நன்றி தெரிவிப்பார்கள்.

“If you want me to continue working for you, I need a 20% raise.

A successful man, working as a sales representative in a large company,
tells his boss one day,
“If you want me to continue working for you, I need a 20% raise.
You have 24 hours to give me an answer.
I have four companies chasing me, so let me know your decision”.

The boss is alarmed. “In this recession, a 20 percent raise?
So many employees are being laid off, and so many others have
seen a major cut in their salaries, yet you want a 20% raise?”
“I will not argue with you,” says the employee.
“As I said, there are four companies chasing me,
so just let me know your decision.”

Next day, the boss calls him in, and says,
that due to his great performance he decided
to comply and will give him the requested raise.

“Great,” the man says, “ I will continue gladly with you.”

As he is leaving, his boss asked,
“Out of curiosity, who are the four companies chasing you?”

“Oh” he responded,
“Kotak Personal loan , Citi credit card, SBI Vehicle Loan, and HDFC Home loans.”

I have to repay them all😂😂😝😝

குட்டி கதை…

சர்ச்சில் திருமணம் நடந்து கொண்டிருந்தது. வந்திருந்தவர்களில் ஒரு சிறுமி, தனது அம்மாவிடம் கேட்டாள்:
”அம்மா, ஏன் கல்யாணப் பொண்ணு வெள்ளைக் கலர்லே கவுன் போட்டுருக்கு?”
”வெள்ளைக் கலர் மகிழ்ச்சிக்கு அடையாளம். இன்னைக்கு அந்த பொண்ணுக்கு வாழ்க்கையிலே சந்தோஷமான நாள் இல்லையா? அதனால்தான் வெள்ளைக்கலர் கவுன் போட்டுருக்கு”
”அப்ப, மாப்பிள்ளை ஏன் கருப்புக் கலர் கோட் சூட் போட்டுருக்காரு?”
”??????”
இதுக்கு உங்க யார்கிட்டயாவது பதில் இருக்கா….?