வேலன் டைன்ஸ் டே

ஓம்! சரவண பவ!

நமக்கு முருகன் பழத்திற்காக சண்டையிட்டு   பழனி மலை சென்றது தெரியும். ஆனால்  அதற்கு  பிறகு நடந்த  கதை எவ்வளவு  பேருக்கு  தெரியும்?  இதோ! மேலே  படியுங்கள்.

குமரன் கோபத்தை தனித்து  அவரை கைலாயம் அழைத்து  சென்றனர்.  நம் வேலன்  வரவிற்காக அனைத்து கடவுள்களும்,  தேவர்களும்  காத்து  கொண்டு  இருந்தனர். அறுசுவை விருந்து அளிக்கப்பட்டது.  யாவரும்  மகிழ்ச்சியில்  திளைத்தனர் ஒருவரை தவிர…. ஆம்! இந்த கலகத்திற்கு காரணமாக  இருந்த  நாரதர் தான் அவர்.

கண் முன்னே  அறுவை  உணவு  …ஆனால் அவருக்கு  பசியே இல்லை. .. காரணம்  புரியவில்லை. .. நாராயணனை நோக்கி ஓடினார். 
திருமால் அவருக்கு  விளக்கினார்.

‘நாரதா!   இது முருகனின் கோபத்தால் தான். உன் கலகம் நன்மையில்  முடிந்தாலும்  ஒரு பாலகன் பழம் கிடைக்காமல் ஏமாந்து  போனான்.   எப்படி முருகனால்  பழம் உண்ண முடியாம‌ல்  போனதோ அதே போல் உன்னாலும் உண்ண முடியாமல்  போனது.   இது தொடரும்’ என்றார்.

பயந்து போன நாரதர்  ‘இதற்கு  தீர்வே கிடையாதா? ‘ என்று வினவினார்.
நாரதா! நீ முருகனுக்கு மீண்டும்  ஒரு  அரிய கனியை தேடி கொடு.  அவர் அதை  சாப்பிட்டால் உன் சாபம் தீரும் என்றார்.

நாரதரும் தேடி அலைந்து ஒரு கனியை கொண்டு வந்து  வேலவனிடம் கொடுத்தார். 

நாரதரின் நிலையை உணர்ந்த முருகன் அந்த பழத்தை  உண்டார். நாரதரின் சாபம் நீங்கியது.

நாரதர் வேலனை வணங்கினார்.

ஐயனே! என் சாபம் தீர நீங்கள்  இந்த கனியை  உண்ட தினத்தை அனைவரும்  கொண்டாட வேண்டும் என்று வேண்டினார்.  அருகில் இருந்த அகத்தியர் நாரதரிடம் கூறினார். நாரதா!  நீ தந்த கனியை வேலன் உண்ட தினம் இன்று முதல் ‘வேலன் டைன்ஸ்’  தினம் என்று அழைக்கப்படும் என்று. 
அது தான் நாம் கொண்டாடும் ‘வேலன்டைன்ஸ்   டே’ 😊

Advertisements

வேலண்டைன்ஸ் டே

வேலையில்லா 🙇🏻 🙇🏻 🙇🏻 சங்கத்தின் சமீபத்திய ஆராய்ச்சி 📚 📖 📗 ✏ 📕 முடிவு: 😄😄

முதன்முதலில் காதல் ❤ திருமணம் 👫 செய்த தமிழ் கடவுள் 🗻 🗻 🗻முருகன்..

வடி’வேலனு’க்கு நன்றி சொல்லும் விதமாக கொண்டாடப்பட்ட
“வேலன்”-டேங்க்ஸ் டே..வே மருவி வேலண்டைன்ஸ் டே..வானது..

வெற்றி வேலனுக்கு
அரோகரா… 🐔 🐓 🐔
அரோகரா… 🐓 🐔 🐓

# OLX-லே வித்திரு…..

Girl : அப்பா.. ஒரு முக்கியமான Matter பேசணும்……

Father : சொல்லும்மா..

Girl: நான் ஒரு பையனை Love பண்றேன். அவன் Americaவிலே இருக்கான்….. .

Father : அமெரிக்காவிலே இருக்கிறவன் உங்கிட்ட எப்படி மாட்டினான்?

Girl: WEBSITE-லே தெரிந்து
# FACEBOOK-லே Friendship ஆகி
# SKYPE-லே Propose பண்ணினான்….
# WHATSAPP-லே 2 மாசத்திலிருந்து Love பண்ணிட்டு இருக்கோம்………..

Father : ஓ.. அப்படியா…. அப்படீனா
=> # TWITTER-லே MARRIAGE பண்ணிக்கோ
# FLIPKART-லே BABYS order பண்ணிக்கோ
# GOOGLE-லே இருந்து Name வச்சிக்கோ And Finally ஏதும் பிடிக்கலைனா…
# OLX-லே வித்திரு…..

😀😀😀😀😀😀😀😀

காதலர் தினம் ஸ்பெஷல்

காதலர் தினம் ஸ்பெஷல் :படித்தவுடன் பகிர நினைத்தது:

👉 காதலிக்கிறீர்கள் என்றால்.,

* உண்மையாக இருங்கள்
* சந்தேகம் தவிருங்கள்
* காதலை ரசித்து அனுபவியுங்கள்

👉 காதல் தோல்வி/பிரிவு அடைந்தவர் என்றால்.,

* அழுவதை நிறுத்துங்கள்
* தனிமையை தவிருங்கள்
* சோக பாடல்களை கேட்காதீர்கள்
(மேலும் காயப்படுத்தும் )

👉 காதலும் இல்லை, கல்யாணமும் ஆகவில்லை என்றால் .,

* மிக மிக சந்தோஷமாயிருங்கள்
* நண்பர்கள், குடும்பத்தினருடன் அதிக நேரம் செலவளியுங்கள்
* மனதிற்கு பிடித்தவரை விரைவில் சந்தீப்பீர்கள் என நம்புங்கள்.

👉 திருமணம் ஆனவர் என்றால்.,

* உங்களுக்கான தகவல் எதுவும் இல்லை
* உங்கள் ஆட்டம் முடிந்து நாட்களாகிவிட்டது
* இந்த பதிவை டெலிட்  பண்ணிட்டு, நேரத்தை வீணாக்காமல் வீட்டை சுத்தம் செய்ற வேலை, சமையல் வேலை இருந்தா பாருங்க…..!!!!!

😝😝😝😝😝😝😝😝😝😝