​முட்டை கொத்து பரோட்டா

​முட்டை கொத்து பரோட்டா
தேவையான  பொருட்கள்:
1. ரெடிமேட் பரோட்டா – 3
2. பெரிய  வெங்காயம் – 2
3. பச்சை மிளகாய் – 3
4. மிளகாய் தூள்  – 1/2 ஸ்பூன்
5. மல்லி தூள் -1/2 ஸ்பூன்
6. கறிமசாலா தூள் – 1/4 ஸ்பூன்
7. மிளகு தூள் – 1/4 ஸ்பூன்
8. கொத்தமல்லி இலை

      புதினா இலை               –  சிறிதளவு 
9.  உப்பு – தேவையான அளவு 
10. எண்ணெய் – தேவையான  அளவு 

செய்முறை:
1.  முதலில் அடுப்பை பற்ற  வைக்கவும். 
2.   பின்பு ஒரு இரும்பு சட்டியை அடுப்பில் 
       வைக்கவும்.
3.  அதில் சிறிது எண்ணெய் போட்டு காய விடவும்.
4.  நறுக்கி வைத்துள்ள வெங்காயம் போட்டு சிறிது        
     நேரம் வதக்கவும்.

 

5.  அடுத்து பச்சை மிளகாய்,புதினா, மல்லி  இலை,   
     போட்டு வதக்கவும்.
6.  அடுத்து மிளகாய் தூள்,மல்லி தூள்,மிளகு 
     தூள்,கரி மசாலா போட்டு வதக்கவும்.

     

7.  அடுத்து முட்டையை உடைத்து ஊற்றி 
     தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு    
      வதக்கவும்.
8.  இறுதியாக பரோட்டாவை சிறுது சிறிதாக வெட்டி  
     சேர்க்கவும். 
9.  மேலே கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.

Advertisements