வாழ்க்கை தத்துவம்:-

நம் சட்டையின் முதல் பட்டனை தவறாக போட்டுவிட்டால்… பின் வரும் எல்லா பட்டன்களும் தவறாகவே அமையும்!” ……

சொன்னவர் :

டெய்லர் பழனிச்சாமி’.    

😂எல்லா தத்துவத்தையும் ஷேக்ஸ்பியர் மட்டும்தான்  சொல்லனும் னு எதிர்பார்க்காதீங்க!)

Advertisements

"பேபி"

மிகவும் தாமதமாக கண்டு பிடிக்கப்பட்ட ரகசியம்….

மனைவியை யாராவது “பேபி” என்று கூப்பிட்டால்….ரொம்ப செல்லமாக கூப்பிடுறாருன்னு அவங்க கணவன்னு நீங்க நினைச்சீங்கன்னா… அது ரொம்ப தப்பு….

“பேயே…பிசாசே….” என்பததைத்தான் சுருக்கி இவ்வாறு “பேபி….”ன்னு கூப்பிடுறாங்களாம்….

இது என்னோட சொந்த கருத்து அல்ல.. இந்த அரிய கண்டுபிடிப்பு பல கல்வெட்டுக்களையும், ஓலை சுவடிகளையும் ஆராய்ந்த பின் தமிழ் கூறும் நல்லுலகம் சொன்னது …. !

😱Second Opinion-😱 PRICELESS😎

Headache & testicles:

Joe had suffered from really bad headaches for the last 20 years.

He eventually decides to go and see a Doctor.

The Doctor said, ‘Joe, the good news is I can cure your headaches.
The bad news is that it will require castration.
You have a very rare condition, which causes your testicles to press on your spine and the pressure creates one hell of a headache.   

The only way to relieve the pressure is to remove the testicles.’

Joe was shocked and depressed.He wondered if he had anything to live for. 

He had no choice but to go under the knife. The surgery cost him $15,000.

When he left the hospital, he was without a headache for the first time in 20 years, but he felt like he was missing an important part of himself.  

As he walked down the street, he realized that he felt like a different person. He could make a new beginning and live a new life.

He saw a Men’s clothing store and thought, ‘That’s what I need… A new Suit.’

He entered the shop and told the salesman, ‘I’d like a new Suit.’

The elderly Tailor eyed him briefly and said, ‘Let’s see… size 44 long.

Joe laughed, ‘That’s right, how did you know?’

‘Been in the business 60 years!’ the tailor said.

Joe tried on the suit it fitted perfectly.

As Joe admired himself in the mirror, the salesman asked, ‘How about a new shirt?’

Joe thought for a moment and then said, ‘Sure.’

The salesman eyed Joe and said, ‘Let’s see, 34 sleeves and 16-1/2 neck.’

Joe was surprised, ‘That’s right, how did you know?’

‘Been in the business 60 years.’

Joe tried  the shirt and it fitted perfectly.

Joe walked comfortably around the shop and the salesman asked, ‘How about some new Underwear?’

Joe thought for a moment and said, ‘Sure..’

The salesman said, ‘Let’s see….. size 36.

Joe laughed, ‘Ah ha! I got you! I’ve worn a size 34 since I was 18 years old..’

The salesman shook his head, ‘You can’t wear a size 34. A size 34 would press your Testicles up against the base of your spine and give you one hell of a Headache.’😣😣

Surgery $ 15,000 😁
New suit – $ 400 😰
New shirt – $ 36 😕
New underwear – $ 6 😏

😱Second Opinion-😱

         PRICELESS😎

Always take second opinion before going under the Surgeons knife… 😜😜😜

Special bhelpuri menu

The menu at a bhelpuri shop….

1) bhelpuri Rs. 10
2) Special bhelpuri Rs 12
3) Very Special bhelpuri Rs 15
4) Extra Special bhelpuri Rs 16
5) Double Extra Special bhelpuri Rs.20
6) Sunday Special bhelpuri Rs 25
(Sunday only)

To check each & every Bhelpuri for its different taste, I started eating everyday a different one. . . . .

But soon I discovered that each & every one had  the same taste of Bhelpuri.

Finally one day I asked him the reason for the same taste?
💷 💵 💴

Belwala said: bhelpuri cost. . . . Rs 10

Special bhelpuri means spoons washed … 🍴

Very Special bhelpuri means spoon and plates both washed … 🍛🍴

Extra Special bhelpuri means washing hands before putting the  Bhel in washed plates & served with washed spoons… 👏

Double Extra Special bhelpuri means clean drinking water is provided separately … 💧

Saying this he fell silent.

Then I asked What is Sunday Special?

Belwala said : Sunday … I’m bathing. . .
😝😝😝😛😜😀

உத்தவ கீதை

கண்ணன் ஏன் பாண்டவர்களை காப்பாற்றவில்லை?
(கண்ணனின் அற்புத விளக்கம்)
***************************

பகவான் கிருஷ்ணனின் குழந்தைப் பருவம் முதலே, அவருக்குப் பணிவிடைகள் செய்து, தேரோட்டி, பல்வேறு சேவைகள் புரிந்தவர், உத்தவர்.

இவர் தனது வாழ்நாளில், தனக்கென நன்மைகளோ வரங்களோ கண்ணனிடம் கேட்டதில்லை.

துவாபர யுகத்தில், தமது அவதாரப் பணியை முடித்துவிட்ட நிலையில், உத்தவரிடம் ஸ்ரீகிருஷ்ணர், ”உத்தவரே, இந்த அவதாரத்தில் பலர் என்னிடம் பல வரங்களும், நன்மைகளும் பெற்றிருக்கின்றனர். ஆனால், நீங்கள் எதுவுமே கேட்டதில்லை.

ஏதாவது கேளுங்கள், தருகிறேன். உங்களுக்கும் ஏதாவது நன்மைகள் செய்துவிட்டே, எனது அவதாரப் பணியை முடிக்க நினைக்கிறேன்” என்றார்.

தனக்கென எதையும் கேட்காவிட்டாலும், சிறு வயது முதலே கண்ணனின் செயல்களைக் கவனித்து வந்த உத்தவருக்கு… சொல் ஒன்றும், செயல் ஒன்றுமாக இருந்த கண்ணனின் லீலைகள், புரியாத புதிராக இருந்தன. அவற்றுக்கான காரண, காரியங்களைத் தெரிந்துகொள்ள விரும்பினார்.

”பெருமானே! நீ வாழச் சொன்ன வழி வேறு; நீ வாழ்ந்து காட்டிய வழி வேறு! நீ நடத்திய மகாபாரத நாடகத்தில்… நீ ஏற்ற பாத்திரத்தில்,
நீ புரிந்த செயல்களில், எனக்குப் புரியாத விஷயங்கள் பல உண்டு. அவற்றுக்கெல்லாம் காரணங்களை அறிய ஆவலாக இருக்கிறேன். நிறைவேற்றுவாயா?” என்றார் உத்தவர்.

”உத்தவரே! அன்று குருக்ஷேத்திரப் போரில் அர்ஜுனனுக்காக நான் சொன்னது, ‘பகவத் கீதை’. இன்று உங்களுக்குத் தரும் பதில்கள், ‘உத்தவ கீதை’. அதற்காகவே உங்களுக்கு இந்தச் சந்தர்ப்பத்தைத் தந்தேன். தயங்காமல் கேளுங்கள்” என்றான் பரந்தாமன்.

உத்தவர் கேட்க ஆரம்பித்தார்: ”கண்ணா! முதலில் எனக்கு ஒரு விளக்கம் வேண்டும். உண்மையான நண்பன் யார்?”

”நண்பனுக்கு ஏற்படும் துயரத்தைத் தீர்க்க, உடனே அழைப்பு இல்லா மலேயே வந்து உதவி செய்பவனே உற்ற நண்பன்” என்றான் கண்ணன்

.
”கிருஷ்ணா! நீ பாண்டவர்களின் உற்ற நண்பன். உன்னை அவர்கள் ஆபத்பாந்தவனாக, பரிபூரணமாக நம்பினார்கள்.

நடப்பதை மட்டுமல்ல; நடக்கப் போவதையும் நன்கறிந்த ஞானியான நீ… ‘உற்ற நண்பன் யார்’ என்பதற்கு நீ அளித்த விளக்கத்தின்படி… முன்னதாகவே சென்று, ‘தருமா! வேண்டாம் இந்தச் சூதாட்டம்’ என்று தடுத்திருக்கலாம் அல்லவா? ஏன் அப்படிச் செய்யவில்லை? போகட்டும்.

விளையாட ஆரம்பித்ததும், தருமன் பக்கம் அதிர்ஷ்டம் இருக்கும்படி செய்து, வஞ்சகர்களுக்கு நீதி புகட்டியிருக்கலாம்.

அதையும் நீ செய்யவில்லை. தருமன் செல்வத்தை இழந்தான்; நாட்டை இழந்தான்; தன்னையும் இழந்தான். சூதாடியதற்குத் தண்டனையாக, அதோடு அவனை விட்டிருக்கலாம்.

தம்பி களை அவன் பணயம் வைத்த போதாவது, நீ சபைக்குள் நுழைந்து தடுத்திருக்கலாம். அதையும் நீ செய்யவில்லை. ‘திரௌபதி அதிர்ஷ்டம் மிக்கவள். அவளைப் பணயம் வைத்து ஆடு. இழந்தது அனைத்தையும் திருப்பித் தருகிறேன்’ என்று சவால் விட்டான் துரியோதனன்.

அப்போதாவது, உனது தெய்வீக சக்தியால், அந்தப் பொய்யான பகடைக் காய்கள் தருமனுக்குச் சாதகமாக விழும்படி செய்திருக்கலாம். அதையும் செய்யவில்லை.

மாறாக, திரௌபதியின் துகிலை உரித்து, அவளின் மானம் பறிபோகும் நிலை ஏற்பட்ட போதுதான் சென்று, ‘துகில் தந்தேன், திரௌபதி மானம் காத்தேன்’ என்று மார்தட்டிக் கொண்டாய்.

மாற்றான் ஒருவன், குலமகள் சிகையைப் பிடித்து இழுத்து வந்து, சூதர் சபையில் பலர் முன்னிலையில், அவள் ஆடையில் கை வைத்த பிறகு,
எஞ்சிய மானம் என்ன இருக்கிறது? எதனைக் காத்ததாக நீ பெருமைப்படுகிறாய்?

ஆபத்தில் உதவுபவன்தானே ஆபத் பாந்தவன்? இந்த நிலையில் உதவாத நீயா ஆபத்பாந்தவன்? நீ செய்தது தருமமா?” என்று கண்ணீர் மல்கக் கேட்டார் உத்தவர்.

இது உத்தவரின் உள்ளக் குமுறல் மட்டுமன்று; மகாபாரதம் படித்துவிட்டு நாம் அனைவருமே கேட்கும் கேள்விகளே இவை. நமக்காக இவற்றை அன்றே கண்ணனிடம் கேட்டிருக்கிறார் உத்தவர்.

பகவான் சிரித்தார். ”உத்தவரே… விவேகம் உள்ளவனே ஜெயிக்க வேண்டும் என்பது உலக தர்ம நியதி. துரியோதனனுக்கு இருந்த விவேகம் தருமனுக்கு இல்லை. அதனால்தான் தருமன் தோற்றான்” என்றான் கண்ணன்.

உத்தவர் ஏதும் புரியாது திகைத்து நிற்க, கண்ணன் தொடர்ந்தான்:

”துரியோ தனனுக்கு சூதாடத் தெரியாது. ஆனால், பணயம் வைக்க அவனிடம் பணமும், ஏராளமான ஆஸ்தியும் இருந்தது. ‘பணயம் நான் வைக்கிறேன். என் மாமா சகுனி, பகடையை உருட்டிச் சூதாடுவார்’ என்றான் துரியோதனன்.

அது விவேகம். தருமனும் அதுபோலவே விவேகத்துடன் செயல்பட்டு, ‘நானும் பணயம் வைக்கிறேன். ஆனால், என் சார்பாக என் மைத்துனன் ஸ்ரீகிருஷ்ணன் பகடைக்காயை உருட்டுவான்” என்று சொல்லியிருக்கலாமே?

சகுனியும் நானும் சூதாடியிருந்தால், யார் ஜெயித்திருப்பார்கள்? நான் கேட்கும் எண்ணிக்கைகளைச் சகுனியால் பகடைக் காய்களில் போடத்தான் முடியுமா? அல்லது, அவன் கேட்கும் எண்ணிக்கைளை என்னால்தான் போட முடியாதா? போகட்டும்.

தருமன் என்னை ஆட்டத்தில் சேர்த்துக் கொள்ள மறந்துவிட்டான் என்பதையாவது
மன்னித்த விடலாம். ஆனால், அவன் விவேகமில்லாமல் மற்றொரு மாபெரும் தவற்றையும் செய்தான்.

‘ஐயோ… விதிவசத் தால் சூதாட ஒப்புக்கொண்டேனே! ஆனால், இந்த விஷயம் ஸ்ரீகிருஷ்ணனுக்கு மட்டும் தெரியவே கூடாது. கடவுளே! அவன் மட்டும் சூதாட்ட மண்டபத்துக்கு வராமல் இருக்க வேண்டும்’ என்று வேண்டிக் கொண்டான்;

என்னை மண்டபத்துக்குள் வர முடியாத வாறு, அவனே கட்டிப் போட்டுவிட்டான். நான் அங்கு வரக்கூடாதென என்னிடமே வேண்டிக்கொண்டான்.

யாராவது தனது பிரார்த்தனையால் என்னைக் கூப்பிட மாட்டார்களா என்று மண்டபத்துக்கு வெளியில் காத்துக்கொண்டு நின்றேன்.

பீமனையும், அர்ஜுனனையும், நகுல- சகாதேவர்களையும் வைத்து இழந்தபோது, அவர்களும் துரியோதனனைத் திட்டிக் கொண்டும், தங்கள் கதியை எண்ணி நொந்து கொண்டும் இருந்தார்களே தவிர, என்னைக் கூப்பிட மறந்துவிட்டார்களே!

அண்ணன் ஆணையை நிறைவேற்ற துச்சாதனன் சென்று, திரௌபதியின் சிகையைப் பிடித்தபோது, அவளாவது என்னைக் கூப்பிட்டாளா? இல்லை.

அவளும் தனது பலத்தையே நம்பி, சபையில் வந்து, வாதங்கள் செய்து கொண்டிருந்தாளே ஒழிய, என்னைக் கூப்பிடவில்லை! நல்லவேளை..

. துச்சாதனன் துகிலுரித்தபோதும் தனது பலத்தால் போராடாமல், ‘ஹரி… ஹரி… அபயம் கிருஷ்ணா… அபயம்’ எனக் குரல் கொடுத்தாள் பாஞ்சாலி. அவளுடைய மானத்தைக் காப்பாற்ற அப்போதுதான் எனக்குச் சந்தர்ப்பம் கிடைத்தது.

அழைத்ததும் சென்றேன். அவள் மானத்தைக் காக்க வழி செய்தேன். இந்தச் சம்பவத்தில் என் மீது என்ன தவறு?” என்று பதிலளித்தான் கண்ணன்.

”அருமையான விளக்கம்
கண்ணா! அசந்துவிட்டேன். ஆனால், ஏமாறவில்லை. உன்னை இன்னொரு கேள்வி கேட்கலாமா?” என்றார் உத்தவர். ”கேள்” என்றான் கண்ணன்.

”அப்படியானால், கூப்பிட்டால்தான் நீ வருவாயா? நீயாக, நீதியை நிலை நாட்ட, ஆபத்துகளில் உன் அடியவர் களுக்கு உதவ வரமாட்டாயா?”
புன்னகைத்தான் கண்ணன்

. ”உத்தவா, மனித வாழ்க்கை அவரவர் கர்ம வினைப்படி அமைகிறது. நான் அதை நடத்து வதும் இல்லை; அதில் குறுக்கிடுவதும் இல்லை. நான் வெறும் ‘சாட்சி பூதம்’. நடப்பதையெல்லாம் அருகில் நின்று பார்த்துக்கொண்டு நிற்பவனே! அதுதான் தெய்வ தர்மம்” என்றான்.

”நன்றாயிருக்கிறது கிருஷ்ணா! அப்படியானால், நீ அருகில் நின்று, நாங்கள் செய்யும் தீமைகளையெல்லாம் பார்த்துக் கொண்டிருப்பாய். நாங்கள் தவறுகளைத் தொடர்ந்து செய்து கொண்டேயிருந்து பாவங்களைக் குவித்து, துன்பங்களை அனுபவித்துக் கொண்டே இருக்க வேண்டும். அப்படித்தானே?” என்றார் உத்தவர்.

”உத்தவரே! நான் சொன்ன வாசகங்களின் உட்பொருளை நன்றாக உணர்ந்து பாருங்கள். நான் சாட்சி பூதமாக அருகில் நிற்பதை நீங்கள் உணரும் போது, உங்களால் தவறுகளையோ தீவினை களையோ நிச்சயமாகச் செய்ய முடியாது.

அதை நீங்கள் மறந்துவிடும்போதுதான், எனக்குத் தெரியாமல் செயல்களைச் செய்துவிடலாம் என்று எண்ணுகிறீர்கள்.

பாதிப்புக்கு உள்ளாக்கும் சம்பவங்கள் நிகழ்வதும் அப்போதுதான். எனக்குத் தெரியாமல் சூதாடலாம் என்று தருமன் நினைத்தானே, அதுதான் அவனது அஞ்ஞானம்.

நான் சாட்சி பூதமாக எப்போதும், எல்லோருடனும் இருப்பவன் என்பதை தருமன் உணர்ந்திருந்தால், இந்த சூதாட்ட நிகழ்ச்சி வேறு விதமாக
முடிந்திருக்கும் அல்லவா?” என்றான் ஸ்ரீகிருஷ்ணன்.

உத்தவர் வாயடைத்து, பக்திப் பரவசத்தில் ஆழ்ந்தார். ஆகா… எத்தனை ஆழமான தத்துவம்! எத்தனை உயர்ந்த சத்யம்!

பகவானைப் பூஜிப்பதும், பிரார்த்தனை செய்வதும், அவனை உதவிக்கு அழைக்கும் ஓர் உணர்வுதானே! ‘அவனின்றி ஓர் அணுவும் அசையாது’ என்ற நம்பிக்கை வரும்போது, அவன் சாட்சி பூதமாக அருகில் நிற்பதை எப்படி உணராமல் இருக்க முடியும்?

அதனை மறந்துவிட்டு எப்படிச் செயலாற்ற முடியும்? இந்த தத்துவத்தைதான் பகவத்கீதை முழுவதிலும் கண்ணன் அர்ஜுனனுக்கு உபதேசித்தான்.

அர்ஜுனனுக்காகத் தேரைச் செலுத்தி வழிநடத்தினானே தவிர, அர்ஜுனன் இடத்தில் தானே நின்று அவனுக்காகப் போராடவில்லை

வேலன் டைன்ஸ் டே

ஓம்! சரவண பவ!

நமக்கு முருகன் பழத்திற்காக சண்டையிட்டு   பழனி மலை சென்றது தெரியும். ஆனால்  அதற்கு  பிறகு நடந்த  கதை எவ்வளவு  பேருக்கு  தெரியும்?  இதோ! மேலே  படியுங்கள்.

குமரன் கோபத்தை தனித்து  அவரை கைலாயம் அழைத்து  சென்றனர்.  நம் வேலன்  வரவிற்காக அனைத்து கடவுள்களும்,  தேவர்களும்  காத்து  கொண்டு  இருந்தனர். அறுசுவை விருந்து அளிக்கப்பட்டது.  யாவரும்  மகிழ்ச்சியில்  திளைத்தனர் ஒருவரை தவிர…. ஆம்! இந்த கலகத்திற்கு காரணமாக  இருந்த  நாரதர் தான் அவர்.

கண் முன்னே  அறுவை  உணவு  …ஆனால் அவருக்கு  பசியே இல்லை. .. காரணம்  புரியவில்லை. .. நாராயணனை நோக்கி ஓடினார். 
திருமால் அவருக்கு  விளக்கினார்.

‘நாரதா!   இது முருகனின் கோபத்தால் தான். உன் கலகம் நன்மையில்  முடிந்தாலும்  ஒரு பாலகன் பழம் கிடைக்காமல் ஏமாந்து  போனான்.   எப்படி முருகனால்  பழம் உண்ண முடியாம‌ல்  போனதோ அதே போல் உன்னாலும் உண்ண முடியாமல்  போனது.   இது தொடரும்’ என்றார்.

பயந்து போன நாரதர்  ‘இதற்கு  தீர்வே கிடையாதா? ‘ என்று வினவினார்.
நாரதா! நீ முருகனுக்கு மீண்டும்  ஒரு  அரிய கனியை தேடி கொடு.  அவர் அதை  சாப்பிட்டால் உன் சாபம் தீரும் என்றார்.

நாரதரும் தேடி அலைந்து ஒரு கனியை கொண்டு வந்து  வேலவனிடம் கொடுத்தார். 

நாரதரின் நிலையை உணர்ந்த முருகன் அந்த பழத்தை  உண்டார். நாரதரின் சாபம் நீங்கியது.

நாரதர் வேலனை வணங்கினார்.

ஐயனே! என் சாபம் தீர நீங்கள்  இந்த கனியை  உண்ட தினத்தை அனைவரும்  கொண்டாட வேண்டும் என்று வேண்டினார்.  அருகில் இருந்த அகத்தியர் நாரதரிடம் கூறினார். நாரதா!  நீ தந்த கனியை வேலன் உண்ட தினம் இன்று முதல் ‘வேலன் டைன்ஸ்’  தினம் என்று அழைக்கப்படும் என்று. 
அது தான் நாம் கொண்டாடும் ‘வேலன்டைன்ஸ்   டே’ 😊

ஓவர் மேக்கப் ஒடம்புக்கு நல்லது இல்ல..

32 வயதுப் பெண்மணி ஒருத்திக்கு இதயத்தில் அறுவை சிகிச்சை நடந்தது . கிட்டத்தட்ட மரணத்தின் விளிம்புக்குப் போன ஒரு தருணத்தில் அவள் கடவுளைக் கண்டாள் .

‘ என் காலம் முடிந்துவிட்டதா?’ என்று துக்கத்துடன் கேட்டாள் கடவுளிடம் .
“இல்லை… இல்லை. உனக்கு இன்னும் 38 வருடங்கள், ஏழு மாதம், எட்டு நாட்கள் இருக்கின்றன .” என்றார் கடவுள் .

இதய சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது . பிழைத்து விழித்ததும் , அந்தப் பெண்மணி காஸ்மெடிக் சர்ஜனை வரவழைத்தாள் .

‘ என் மூக்கைச் சற்று நிமிர்த்தி, தொங்கிப் போன கன்னச் சதைகளை இழுத்துத் தைத்து, முகத்தை அழகாக்கி விடுங்கள் . தொய்ந்து போன அங்கங்களைத் திடமாக்கி , என் தொப்பைக் கொழுப்பை அகற்றிவிடுங்கள். என் அழகுக்கு இங்கே இன்னும் பல வருடங்கள் வேலை இருக்கிறது .’ என்றாள் .

ஏராளமான செலவில் அவள் விரும்பியபடி அவள் தோற்றம் மாற்றப்பட்டது . கூந்தலின் நிறத்தைக்கூட மாற்றிக் கொண்டாள் அவள் .

எல்லாம் முடிந்து, மருத்துவமனையில்இருந்து வெளியேற்றப்பட்டாள் . இளைஞர்களின் கண்கள்கூட அவளையே மொய்ப்பதை ரசித்துக்கொண்டுதெருவைக் கடந்தாள் . வேகமாக வந்த லாரி ஒன்றின் கீழ் சிக்கினாள் . தலத்திலேயே உயிர் இழந்தாள் .

கடவுளின் முன் கொண்டு போகப் பட்டாள் .
” எனக்கு இன்னும் 38 வருடங்கள் இருப்பதாகச் சொன்ன நீங்கள் , லாரியில் இருந்து என்னை இழுத்துக் காப்பாற்றியிருக்க வேண்டாமா?” என்று கோபமாகக் கேட்டாள்……….

” அட, நீயா அது ? அடையாளம் தெரியாமல் போய்விட்டதே !” என்றார் கடவுள்!!

— கதை நீதி : ஓவர் மேக்கப் ஒடம்புக்கு நல்லது இல்ல..